காங்கேயம் செய்தியாள பிரபு
செல்:9715328420
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு.!
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம் அருகே சாவடிப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.விஜயகுமார் தலைமை வகித்தார். இதில், கர்ப்பிணி பெண்களுக்கு ‘ஹெல்த்தி மதர், ஹெல்த்தி பேபி’ என்ற திட்டத்தின் மூலம், கர்ப்ப கால ஆரோக்கியம், மனநலம் பேணுதல், ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் இன்றியமையாமை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கண்ணன், சமுதாய நல செவிலியர் லட்சுமி, கிராம நல செவிலியர்கள் சரசுவதி, பூங்கொடி, கவிதா, டிரஸ்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.