திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
17_03_2026,
திருவாரூர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு, பிளாட்டினம் விழா கண்ட திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் CA, பாலமுருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
திருவாரூர் வழியாக பல காலகாலமாய் ஓடி வந்த கம்பன் ரயிலை ( புகை வண்டியை) தடம் மாற்றத்தை கண்டித்து,பல காலமாய் இயங்கி வந்த ஆழித் தேர் ஓடும்
ஆரூர் ஊர் வழியே காலங்காலமாய் ஓடியதொரு இரும்புத்தேர்,ஆரூரின் மற்றும் ஓர் அடையாளமாய் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெயரில் இயங்கி வந்த அந்தத் தேரை திருவாரூர் மார்க்கத்திலேயே இயக்க வேண்டும்,
என இந்த பிரதான கோரிக்கையை முன்வைத்து மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.இதில் அனைத்து வகை சங்கங்கள், அனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள்,ரயில் உபயோகிப்பார் நல சங்கம், மற்றும்பலர் கலந்துகொண்டனர், இந்த ஆர்ப்பாட்டம் மூலம் தீர்வு காணப்படவில்லை எனில், எதிர்வரும் 19- 03- 2026 வியாழக்கிழமை அன்று அனைத்து சங்கங்கள், அனைத்து கட்சிகள், அனைத்து பொது சேவை நிறுவனங்கள்,சமூக ஆர்வலர்களை அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும், என திருவாரூர் பிளாட்டினம் விழா கண்ட விஜயபுரம் வர்த்தக சங்கத் தலைவர் CA, பாலமுருகன் தெரிவித்தார்,