அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா திமுக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார்.
அண்ணா திமுக தேனி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன், தேனி மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி, அமமுக மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேனி நகர அதிமுக செயலாளர் அதிமுக வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி.நாராயணசாமி, தேனி அதிமுக மேற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி வீரமணி கர்ணன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மாயாண்டி லட்சுமி, தேனி நகர அமமுக செயலாளர் குரு கணேஷ் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த
ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் திமுக அரசின் திறனற்ற நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.