திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி கோடைக்குறிஞ்சி பெண்கள் இயக்கம் மூலமாக உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்க தலைவி.ஜெயராணி தலைமையில், முன்னிலை செயலாளர்.மால, இயக்க ஆலோசகர்.ஷீலா, சுப்புலட்சுமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதியில் உள்ள சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்களும், பழங்குடியின பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக. பீட்டர் ஏஞ்சல் செரினா, வழக்கறிஞர், கொடைக்கானல். நீதிமன்றம்,பரிமளம்,வழக்கறிஞர், கொடைக்கானல் நீதிமன்றம், ஆரோக்கிய அகம் துணை இயக்குனர். முருகேசன், வாய்ஸ் நிறுவனத்தின் செயலர்.மைக்கேல், தேன் சுடர் பெண்கள் இயக்கத்தின் ஆலோசகர்கள்.கருத்தம்மாள்,லட்சமி, முதன்மை செயலாக்கம்.அமுதா,தனலட்சுமி துணை செயலாளர், தேனி மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு திட்ட மேலாளர். தமிழன்பன் ஆரோக்கிய அகம். கொடைக்கானல் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக கூல் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை களுக்காகவும் கிராம அடிப்படை தேவைகளுக் காகவும் சேவை செய்த சாதனை பெண்மணிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறந்த மதுவிலக்கு முன்னோடி,சிறந்த கருத்தியல் பெண்ணியவாதி, சிறந்த உட்கட்டமைப்பு முன்னோடி, குழந்தை திருமண தடுப்பு ஆர்வலர் மற்றும் பெண்கள் முன்னேற்ற ஆர்வலர் போன்ற வகைகளில் 8 பெண் மணிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. பொருளாளர்.வசந்தி வரவேற்புரை வழங்கினார். பணியாளர் பிரதீபா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை எலிசபெத் ராணி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியினை ஆரோக்கிய அகம் திட்ட ஒருங்கிணைப்பாளர்ள்.சதாசிவம், பெருமாள், மற்றும் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *