தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளின் ஒரு பகுதியான வாக்குச்சாவடி அலுவலர் பணிகளில் இருந்து தவிர்ப்பு வழங்குதல், பெண் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதியிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டுதல், வாக்குச்சாவடி
களில் பணிபுரியக் கூடிய வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு தேவையான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டி
கோரிக்கை விடப்பட்டுள்ளது..

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு எதிர்வரும் ஏப்ரல் 23-அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவதற்கு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் களிடமிருந்து பணி நியமன ஆணை வழங்குவதற்காக தகவல் பெறும் சுயவிவரப் படிவங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளில் இருந்தும், ஊதியப் பட்டியலின் (IFHRMS) அடிப்படையில் அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமும் தவிர்ப்பு இன்றி சுய விபரப்படிவங்கள் பெறப்பட்டுள்ளதால்தேர்தல் ஆணையத்தால் தவிர்ப்பு வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016-ன் படி 40%-க்கு மேல் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்ற வர்கள், கண் பார்வை குறைபாடு உடையவர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் ஆறு மாத காலமே உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள், இருதயம், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் கள் மற்றும் சிறுநீரக செயல் இழப்பு (டயாலிஸிஸ்) செய்து கொண்டிருப்பவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து தவிர்ப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் தவிர்ப்பின்றி முழுமையாக தபால் ஓட்டுக்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில்மாவட்ட ஆட்சியரிடம்
மாவட்டச்
செயலாளர்
பெ.சீனிவாசகன்
கோரிக்கை விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *