திருவாரூர்., மார்ச் 18
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, நிலையான சோதனை குழு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 36 தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுக்கள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று காலை திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூபாய் 53,810 கைப்பற்றி, திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான சத்யாவிடம் அதனை ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோவன் மற்றும் ராமச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *