குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69.500 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க படுகிறதா? மற்றும் எடுத்து செல்லப்படுகிறதா என குறிஞ்சிப்பாடி பறக்கும் படையினர் குழு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சந்தியா
தலைமையில் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கரை அருகில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.69,500 பணத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது.இதையடுத்து விசாரணை நடத்தியதில் குண்டியமல்லூர் கிராமத்தை சேர்ந்த ரமணி என்பதும் அவரிடம் இருந்து ரூ.69, 500 பணத்தை பறிமுதல் செய்தனர்.பின்னர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.