ஈரோடு மார்ச் 20 ஈரோடு கேரளா சமாஜம் சங்கம் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்த ரமலான் மாத நோன்பு இப்தார் விருந்து ஏற்பாடு சிறப்பாக கேரள சமாஜம் சங்கம் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த ஏற்பாட்டினை கேரள சமாஜ சங்கத்தின் தலைவர் செயலாளர் துணை தலைவர் பொருளாளர் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த இப்தார் நிகழ்ச்சியை ஈரோடு சூளை ஈபிபி நகர் முகமது அனஸ் காசிமி ஹஜரத் துவா ஓதி பாவ மன்னிப்பு துவாக்கள் கேட்டு இப்தார் விருந்து துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் நிறைய இஸ்லாமியர்கள் கேரள இஸ்லாமியர்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள், பெண்கள், குழந்தை கள் ஏராளமானர் கலந்து கொண்டனர்.