திருச்சி மாவட்டம்,முசிறி அருகே உள்ள சீலைபிள்ளையார் புத்தூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுந்தரி தலைமையில் காவலர்கள் சரவணன், திவாகர், பிருந்தா ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் நாமக்கலை சேர்ந்த பிரகாஷ் த/பெ பொன்னுசாமி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 55,900 வைத்திருந்தார்.இந்த பணத்தை கைபற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முசிறி வட்டாட்சியர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இன்றி ரூ ஐம்பதாயிரத்திற்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்