டோல்கேட்டில் லாரியை நிறுத்தி திடீர் மறியல்.
தூத்துக்குடி டு மதுரை தேசிய நெடுஞ்சாலை புதூர் பாண்டியபுரத்தில் சுங்கச்சாவடி உள்ளது இந்த சுங்கச்சாவடியில் அரசு உத்தரவின்படி உள்ளூர் லாரிகளுக்கு 50 சதவீதம் டோல்கேட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் உள்ளூர் லாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத சலுகை திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேசி உள்ளனர் எந்த விதமான உடன்பாடும் ஏற்பாடாக எடுத்து சனிக்கிழமை காலை டோல்கேட்டில் லாரிகளை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் டோல்கேட்டில் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் பேருந்துகள் லாரிகள் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றனர்.
லாரி உரிமையாளர்கள் லாரி ஓட்டுநர்கள் டோல்கேட்டில் மறித்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கடந்த மூன்று மாத காலமாக உள்ளூர் லாரிகளுக்கு 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு வந்தது திடீரென்று நேற்று இரவு முதல் நிறுத்தி உள்ளனர் இந்த சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் கிடையாது மின்விளக்கு வசதிகள் கிடையாது பிளான்ட்ஸ் வாகனம் செல்வதற்கு தனி பாதை கிடையாது நகர எல்லைக்குள் இந்தளது. இந்த டோல்கேட் பிரச்சனைக்கு காரணம் மேலாளர் தான் காரணம். எல்லாரும் தோல் கட்டில் பணம் செலுத்த தயாராக தான் உள்ளோம். மாநகராட்சி எல்லைக்குள் இந்த டோல்கேட் உள்ளது தூத்துக்குடி உள்ளூர் வாகனங்கள் 50 சதவீதம் அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி கட்டணத்தில் வழங்கப்பட்டது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது நேற்று இரவு முதல் 205 ரூபாய் கட்டணம் வாங்கிய வண்டிக்கு 420 ரூபாய் வாங்குகிறார்கள் அதுபோல 285 ரூபாய் வாங்கின வண்டிக்கு தற்போது 585 ரூபாய் வாங்குகிறார்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் கூடுதலாக செலவாகிறது.
இந்த நிர்வாகத்தின் முடியும்படி இன்று லாரியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டு வருகிறோம் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் பழைய கட்டணம் வசூலிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் அதுவரை இந்த போராட்டம் நடைபெறும் ஐந்து டோல் உள்ளது ஆனால் இரவு நேரத்தில் இரண்டு டோல் மட்டும் திறந்து வைத்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கிறார்கள் அதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். என்று லாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்