தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில், ரமலான் திருநாளை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
கோவை உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகம் அருகே உள்ள திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான ரமலான் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.
தொழுகையைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் அப்பாஸ் சிறப்புப் பேருரை (குத்பா) ஆற்றினார் அவர் தனது உரையில் கூறுகையில்,நோன்பு இருப்பது என்பது இறையச்சத்தை அதிகரிப்பதற்கான ஒரு பயிற்சி என குறிப்பிட்ட அவர், தவறான பேச்சுக்கள் மற்றும் செயல்களிலிருந்து விலகி, இந்த நோன்பு காலங்களில் நாம் பெற்ற பயிற்சியை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். என கூறினார்..
தொழுகைக்கு பிறகு வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போரால் அமைதியின்றி தவிக்கும் மக்களுக்காகவும் தொழுகையில் பிரார்த்தனை செய்யப்பட்டது.