தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் பகுதியில் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கினால் தொடர் கிராவல் மண் செம்மண் திருட்டு இரண்டு லாரிகளை பிடித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் அலங்கியம் குண்டடம் பகுதிகளில் அதிக அளவு கிராவல் மண் செம்மண் அரசு அனுமதி இல்லாமல் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொது மேடைகளில் பேசி வந்த நிலையில் வருவாய்த்துறையினர் எந்தவித வழக்கும் பதியாமல் மண் திருட்டுயை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டப்பட்டனர் இதைத்தொடர்ந்து குண்டம் காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்டு பெல்லம்பெட்டி அருகே மண் திருடி வந்த இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது இரண்டு லாரிக்கு அரசு அனுமதி சீட்டு இல்லாமல் திருடப்பட்டு வந்ததாக கூறி குண்டம் காவல் நிலையம் காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து லாரியை கைப்பற்றினார்.
மேலும் இயக்கியவர் லாரியை ஓட்டுநர் கருப்புசாமி உடுமலை சேர்ந்த ஆத்து கிணத்துப்பட்டி சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் தப்பிவிட்டார் என்பதும் தெரிகிறது மேலும் குண்டடம்.ஊதியூர் காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற மண் திருட்டு நடைபெற்று வருவதாகவும் கடந்த வாரத்தில் இரண்டு லாரிகள் பிடித்து ஊதியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து இப்பகுதிகளில் அதிக அளவு மண் திருட்டு நடைபெறுவதாகவும் வருவாய் துறையினர் எந்தவித வழக்கும் பதியவில்லை என்றும் கூறப்படுகிறது காவல்துறையினர் வழக்கு பதிந்ததால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள் மேலும் இதுபோல் தாராபுரம் பகுதிகளில் நடக்கும் மண் திருட்டை வருவாய்த்துறையினர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பு.