உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் வளர்ப்பின் அவசியத்தையும் காடுகள் அழிக்காமல் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விலக்கிக் கூறப்பட்டுமரக்கன்றுகள் நடப்பட்டது.
மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியத்தை பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நேரில் சென்று மரக்கன்றுகள் 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி எடுத்துரைக்கப்பட்டது. புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு காடுகள் வளர்க்க வேண்டிய அவசியத்தை மற்றும் அவசரத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது
வனசரக அலுவலர் என். பிரவீன் வழிகாட்டுதலின் பேரில் வனவர் ஆர். ராஜ்குமார் வனப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கர் துணை காவல் கண்காணிப்பாளர். திரு.ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர் விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நிறுவனர் சக்தி காந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்