வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது உலாவரும் தும்பிக்கையில்லாத குட்டியானை தற்போது மீண்டும் உலாவந்துள்ளது இக்காட்சியை அப்பகுதி வனத்துறையினர் படம் பிடித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தும்பிக்கையில்லா குட்டி யானையை அதன் தாய்யானை அரவணைத்து செல்லும் அரிய படக்காட்சியை சுற்றுலா பயணிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
22.06.2026