துறையூர் மார்ச் -23
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி- நல்லவன்னிப்பட்டி பிரிவு ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகில் 21-03-2026 அன்று மாலை 6 மணி அளவில் SST C TEAM தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் கார்த்திக், நடராஜன்,அண்ணாமலை உள்ளிட்ட போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

துறையூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் சென்னையை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மனைவி மாலதி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூபாய் 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்து துறையூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மணிமாறனிடம் ஒப்படைத்தனர்.

துணை தேர்தல் அலுவலர் , வட்டாட்சியர் சிவக்குமார்,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முத்து, மண்டல துணை வட்டாட்சியர் ஸ்ரீராம், துணை அலுவலர் பன்னீர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *