அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில்சித்திரை நாயக்கர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தம்மாள் கோவில் கும்பாபிஷேகம்
நடைபெற்றது. விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையைவலம் சுற்றி வந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கருவறையில் அமைந்துள்ள அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை பொருட்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளைசித்திரை நாயக்கர் வகையறாக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.