தென்காசி, மார்ச் – 23

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்பை திமுகவின் தேர்தல் கள அலுவலமாக பயன்படுத்தியதாக புகார் வந்ததன் எதிரொலி பொறியாளர் குடியிருப்பை தேர்தல் மேலிட பார்வையாளரின் உத்தரவின் பேரில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை அறிவித்த மாத்திரத்தில் தேர்தல் ஆணையத்தினுடைய கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகார நிர்வாகங்களை நேரடியாக கண்காணித்து வந்தது.
அதன் பேரில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் ஆளுமையில் இருந்த கட்சிகள் என பாகுபாடின்றி புகார் கிடைத்த மறுநிமிடமே நடவடிக்கை மேற்கொள்ளும் மாநில தேர்தல் ஆணையம் கடும் கண்டிப்புடனும் அக்கறையுடனும் நடந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்து உத்தரவிட்டது

அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு தீரஜ்குமார் ஐஏஎஸ் என்ற அதிகாரியை தேர்தல் கண்காணிப்பு பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமனம் செய்தது. தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தீரஜ் குமார் ஐஏஎஸ் குற்றாலம் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி இருக்கிறார்

அவரை பிரபல தேசிய கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் நேரில் சந்தித்து கடையநல்லூர் நகராட்சி அரசு அலுவலகங்களை திமுகவினர் மாலை நேரங்களில் தேர்தல் கள அலுவலமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கடையநல்லூர் நகராட்சி நிர்வாகத்தில் பணியிலிருக்கும் பொறியாளர் குடும்பத்துடன் தங்குவதற்காக கடையநல்லூர் தீயணைப்பு துறைக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்பில் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் தலைமையில் திமுகவினர் ஆக்கிரமித்து இரவு முழுவதும் திமுக தேர்தல் களப் பணிகளை மேற்கொள்வதோடு மது அருந்தும் மது கூடமாகவும் செயல்படுத்தி வருவதாக ஒரு புகார் மனுவை அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட தீரஜ் குமார் ஐஏஎஸ் உடன் தனது கீழ் செயல்பட்டு வரும் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் மனுவில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் உண்மை எனில் விசாரணை செய்து உடனடியாக சம்பந்தப்பட்ட பொறியாளர் குடியிருப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் கடையநல்லூர் சட்டமன்ற தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்ததோடு கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்பிற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்த செய்தி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மட்டுமின்றி தென்காசி மாவட்டம் முழுவதிலும் உள்ள திமுகவுக்கு எதிரான மனநிலை கொண்ட அரசியல் கட்சிகளிடம் பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *