கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள சர்வ வல்லவர் ஆலயத்தில் மறுமங்கல படைப்பு, குடும்பக்கூடுகை மற்றும் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா ஆகிய முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல்ராஜதுரை மறுமங்கலபடைப்பு செய்யப்பட்டு திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்கம் தலைவர் வசந்தி அன்னம்மாள் ஒளியேற்றிவைக்கப்பட்ட இவ்விழாவில் மறைமாவட்ட தலைவர் சார்லிபன் சாந்தகுமார், சேகர தலைவர் ஜான் பிரபு, சேகர ஆயர் ராஜ்குமார், சேகர செயலாளர் ரூபிஸ், சேகர பொருளாளர் அகஸ்டின் ராஜா, சிறப்பு விருந்தினராக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் டி.லட்சுமணசிங் மற்றும் சபை மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்