தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் பிரிவில் தனியார் பேருந்து நின்று செல்லாது கண்டித்து பேருந்தைசிறை பிடித்து மக்கள் போராட்டம் மீண்டும் நிக்காமல் சென்றால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கூறி பஸ்சை சிறை பிடிப்போம் என்று தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வேங்கிபாளையம் பிரிவு என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் இருந்தும் திருப்பூர் டு பழனி செல்லும் தனியார் பேருந்துகள் நிக்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் பேருந்தை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது நேற்று மாலை பள்ளியில் இருந்து வந்த சிறுவனை பஸ் இறக்காமல் ஐந்து ஸ்டாப்புகள் தள்ளி கொடுவாய் என்ற இடத்தில் இறங்கிவிட்டு சென்றுள்ளனர்

பள்ளி மாணவன் பெற்றோர்களிடம் கூறி இன்று காலை திருப்பூர் தனியார் பேருந்து scp திருப்பூரிலிருந்து பழனி சென்று மீண்டும் தாராபுரம் அடுத்து வேங்கிபாளையம் வந்த பொழுது 12மணி அளவில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

அப்பொழுது அப்பகுதி சேர்ந்த ஹரிஹர மூர்த்தி என்பவர் கூறுகையில் ஜோதியாம் பட்டி மறவா பாளையம் தாயம் பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் பேருந்து நிறுத்தத்தை நம்பி பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்

பொதுமக்கள் அருகே உள்ள தாராபுரம் கொடுவாய் திருப்பூருக்கு வேலைக்காக சென்று வரும் நிலையில் தனியார் பேருந்துகள் வேங்கி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்று வருகிறது இதை கண்டிக்கு விதமாக பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் தொடர்ந்து நிக்காமல் சென்றால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கூறி தனியார் பெருந்துறை சிறைப்பிடித்து சாலை மறியல் செய்வோம் என்று தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *