தூத்துக்குடி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின் படி நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் வில்லியம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் எட்டையாபுரம் ரோடு பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர். லாரிய ஒட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மது போதையில் லாரி ஓட்டி வந்ததை கருவி மூலம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது வாகன ஓட்டுனர் கோவிந்தனின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
மேலும் குடிபோதையில் லாரியை ஒட்டி வந்ததாக பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது போக்குவரத்து காவல்துறையினர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது