மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

மயிலாடுதுறையில் நடைபெற்ற கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளில் சேவை ஆற்றி வரும் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு. நூல் வெளியீடு மற்றும் அறக்கட்டளை துவக்க விழா விமர்சையாக நடைபெற்றது:-

மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி சங்க முப்பெரும் விழாவான நூல் வெளியீட்டு விழா, மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்க அறக்கட்டளை துவக்க விழா, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆளுநர் லியோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் உதவி ஆளுநர்கள் சஜ்ஜல், ரவிக்குமார், குருகோவிந்த், பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் அய்யாசாமி எழுதிய “அய்யாசாமியும் அயோத்தியா பயணமும்” மற்றும் “செய்வினை” என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்க அறக்கட்டளையை மாவட்ட ஆளுநர் லியோன் துவங்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மருத்துவம், தமிழ், திருமுறை, பரதம், நாவலாசிரியர், இலக்கியம், பொம்மலாட்டம், ஊடகத்துறை, குருதிக்கொடை, தீயணைப்புத்துறை, அன்னதானம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் 20 நபர்களுக்கு கிங்ஸ் அவார்ட்ஸ் 2026 என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேவை சங்க நிர்வாகிகள், சமூக நல அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *