திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் மற்றும் அனைத்து சங்கங்கள், அனைத்து சேவை சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அனைவரும் இணைந்து நடத்திய மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம், கம்பன் ரயிலை தடமாற்றம் செய்வது கண்டித்து திருவாரூர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு, பிளாட்டினம் விழா கண்ட திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் CA, பாலமுருகன் தலைமையில் மாபெரும் கண்டன உண்ணா விரதம் மற்றும் கடையடைப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது,
திருவாரூர் வழியாக பல காலகாலமாய் ஓடி வந்த கம்பன் ரயிலை ( புகை வண்டியை) தடம் மாற்றத்தை கண்டித்து,பல காலமாய் இயங்கி வந்த ஆழித் தேர் ஓடும்
ஆரூர் ஊர் வழியே காலங்காலமாய் ஓடியதொரு இரும்புத்தேர்,ஆரூரின் மற்றும் ஓர் அடையாளமாய் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெயரில் இயங்கி வந்த அந்தத் தேரை திருவாரூர் மார்க்கத்திலேயே இயக்க வேண்டும்,என இந்த பிரதான கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,
இதில் சங்கங்கள், கட்சிகள், சமூக ஆர்வலர்கள்,
ரயில் உபயோகிப்பார் நல சங்கம், மற்றும்பலர் கலந்துகொண்டனர்,
இந்த உண்ணா விரதம் கடையடைப்பு உரிமைக்கான போராட்டம்… கடந்த அரை நூற்றாண்டு காலமாக நம் வாழ்வில் கலந்து இருந்து வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை முழுவதுமாக ரத்து செய்வதற்கு ரயில்வே அதிகாரிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதை எதிர்த்து தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உணர்வோடு உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், என்ற வரிகளுக்கு ஏற்ப நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர் ,