திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மகாராணிகலை அறிவியல்கல்லூரியில் தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சி தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய்கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா தலைமையில் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

பயிற்சியில் 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, தேர்தல் பணிகள் தொடர்பான வழிமுறைகள் குறித்து விளக்கங்கள் பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *