மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அலங்காநல்லூர்
கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் பேசியது கடந்த தேர்தலில் கூட்டாக நாம் சேர்ந்து பல வெற்றிகளை கண்டோம் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு வழங்கிய நமது முதல்வரை நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராக தேர்வு செய்வோம் அதேபோன்று கிளைதோறும் சென்று நமதுகட்சியினர்
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்க வேண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதி வேட்பாளராக வெங்கடேசன் தான் நிறுத்தப்பட உள்ளார்

அவருக்கு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்து தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி மலர இந்த தொகுதி சிறந்ததாக விளங்க வேண்டும் இன்று நடைபெறும் இந்த கூட்டம் தேர்தல் முடிந்து வெற்றி விழாவாக கொண்டாட வேண்டும். இதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில் மஞ்சமலை அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்து இந்த மண்டபத்தில் நம் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினோம் பின்னர்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிய கண்டம் அதேபோன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகள் பெற வேண்டும் 234 தொகுதிகளிலும் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்களின் முடி சூடா மன்னனாக திகழும் தளபதி ஸ்டாலின்அவர்களின் பொற்கால ஆட்சியை தொடரட்டும் என்று தெரிவித்தார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர், ஒன்றிய செயலாளர்கள்தன்ராஜ், பரந்தாமன் முத்தையன், அருண்,ஒன்றியவை தலைவர் நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் வாவிடமருதூர்
கார்த்திகேயன்,ஒன்றிய பொருளாளர் சுந்தர், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன்,சத்திய பிரகாஷ். பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், பால்பாண்டி, ஜெயராமன்,துணைத் தலைவர்கள் சுவாமிநாதன், வக்கீல் கார்த்திக்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்
சேதுசீனிவாசன், தனுஷ்கோடி, நிர்வாகிகள் பங்களாமூர்த்தி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு,சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்,இளைஞரணி துணை அமைப்பாளர் சின்னஊர்சேரி ஆனந்த்,மற்றும் நிர்வாகிகள் பன்னைகுடி பாரிராஜயோகம்,அசோக்,ராஜபிரபு,
பாலகிருஷ்ணன்,பாண்டி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *