தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தொட்டியது மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
முன்னதாக அதிகாலை அம்மன் கங்கைக்கு சென்று நீராடி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வந்தது இந்நிகழ்ச்சியில் சத்ய கரகம் அக்னி கரகம் காவடி ஆட்டம் என முக்கிய வீதிகளில் வழியே தேர் பவனி வந்தது நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.