மதுராந்தகம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பெஞ்சுகள் சிறுதாமூர் ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச பெஞ்சுகள்
கற்றல் வசதியுடன் கல்வி திட்டம் எஸ்.பி.ஓ.ஏ, கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து சிறுதாமூர் ஸ்ரீனிவாசர் அறக்கட்டளையினர் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கற்றல் வசதியில் கல்வி எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி
இதன் மூலம் கிராமங்களில் செயல்படும் அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறையில் உட்காருவதற்கு பெஞ்சுகளும் எழுதுவதற்கு மேசைகளும் வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வேடந்தாங்கல் அருகிலுள்ள சித்திரகூடம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் மணிவண்ணன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கற்றல் வசதியுடன் கல்வி
திட்டத்தின் நிறுவனர் கவிஞர்விஜயகிருஷ்ணனிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் இராஜேந்திரன், சமூக ஆர்வலர் சுகுமார்,
ரங்கப்பன், திவ்யா, உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.