வடலூர் நகராட்சியில்,நடைபெற இருக்கின்ற,2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நூறு சதவிகிதம் நடைபெற, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக வடலூர் நகராட்சி ஊழியர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இந்த விழிப்புணர் பேரணி வடலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, வடலூர் பேருந்து நிலையம் மற்றும் விருதாச்சலம் சாலை வரைசென்று மீண்டும் பேருந்து நிலையம் வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது,நிகழ்ச்சிக்கு
வடலூர் நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை தாங்கினார்.குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார்,


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்,சிறப்பு உதவி கலெக்டர் தனலட்சுமி,கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *