தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் 43 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி உப தலைவர் எஸ் ஞானவேல் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் போடி சட்டமன்ற உறுப்பினர் ஒ. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவில் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் தங்கள் கல்வி பயணத்தை நிறைவு செய்த 408 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் வரவேற்பு உரையில் கல்லூரியின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து கல்வியின் முக்கிய தத்துவத்தை பற்றியும் இன்றைய இளைய சமுதாயத்தினர் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் பற்றியும் மாணவ மாணவியருக்கு புரியுமாறு எடுத்துரைத்து விளக்கிப் பேசினார் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர்கள் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம் இராதாகிருஷ்ணன் பிரபாகர் சொரூபன் ஆர்.சி. பிரபு ஏல விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் மணிவாசகம் டி.பி. ரவி பாலசுப்பிரமணியன் ஹபீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் யுவராஜா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *