பவுஞ்சூர் கிராமத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
கல்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் கிராமத்தில் ஒன்றிய தே.மு. தி. க சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் எஸ் எஸ் யுவராஜ், மூர்த்தி ஆகியோர் தலைமையில நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவைத்தலைவர்கள் அன்புச் செழியன் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் டி.செல்லப்பன், பொருளாளர் இ பிரகாஷ்,கோதண்டம்,
மாநில மீனவரணி துணை செயலாளர் கஜேந்திரன், மகளிரணி நிர்வாகிகள் தேவி ஜெயலட்சுமி பூபாலன் , ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் வி. ஏ. குமார் வரவேற்றார் கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் இரமேஷ் பிரபாகரன்,முன்னாள் ஒன்றிய செயலாளரும் தொகுதி பொறுப்பாளருமான கீழார் ஏ. சிவா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
கூட்டத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்ட மன்ற தொகுதி தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கடுமையாக களப்பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர் இந்த கூட்டத்தில மகளிரணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்