ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர்.வி.நாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு தலைமை உரையாற்றிய முதல்வர் வணிகவியல் பாடத்தின் முக்கியத்துவத்தையும் வேலை வாய்ப்பு பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவிற்கு வணிகவியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் எம். கணேசன் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் புரூனே தரிசலம் நாட்டின் புருனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாகவியல் பேராசிரியர் முனைவர் சுனைத் எம். சேக் அவர்கள் இணைய வழியாக கலந்து கொண்டு வணிகவியல் மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் தாக்கம் ஆகியவற்றைக் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் முனைவர் சி. நடராஜன், இணைப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறைதலைவர் மற்றும் உதவி பேராசிரியர் எல். ஜெகதீசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் வணிகவியல் மன்ற மாணவர் செயலாளர் பி.கிருத்திகா நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் மாணவ-மாணவிகளும் மற்ற துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *