திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,

திருவாரூர் வரலாற்று சிறப்புமிக்க திருவிழா சைவ சமய சிவாலயங்களில் தலைமை பீடமாகவும் சர்வதேச பரிகாரத் தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜா உலக புகழ் பெற்ற ஆழி தேரோட்டம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி(29-03-2026 ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரம் காலை 9.05, மணிக்கு ரிஷப லக்னத்தில் அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆழித்தேர் வடம் பிடிக்கப்படம் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தினர் பங்குபெற்று வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்க இருக்கின்றனர்,

முன்னதாக காலை 5-15, அருள்மிகு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது,அதனைத் தொடர்ந்து, சுப்ரமணியர் தேர், அன திருத்தேர்தல் வடம் பிடித்து இழுக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது,

திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவில் மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படுகிறது, இந்தத் தேர் பல நூற்றாண்டுகளுக்கு ஓடத் தொடங்கியது என வரலாறுகள் தெரிவிக்கிறது,ஆழித்தேர் வித்தகனை யான் கண்டது ஆரூரே” என்று திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரின் சிறப்பை உணர்த்தும் வகையில் பாடி இருக்கிறார்,


தேரின் மொத்த உயரம் 96 அடியாகவும் அகலம் 67 அடியாகவும் உள்ளது, மொத்த எடை 350 டன் இந்தத் தேரை இலுக்க ஒரு கிலோமீட்டர் தூரம் முடைய வட கயிறு பயன்படுத்தப்படுகிறது, தேர் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் தேரை திருப்புவதற்கும் தேரினை நிறுத்துவதற்கும், புளிய மரத்தால் ஆன 600 முட்டுக்கட்டை பயன்படுத்தப்படுகிறது,


இந்தத் தேரின் முன்புறத்தில் ரிக் யஜீர் சாம அதர்வண என்கின்ற நான்கு வேதங்களை குறிக்கிற வகையில் நான்கு குதிரைகள் பாயும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது, இந்தத் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரின் பின்பக்கத்தில் புல் ட்ரவுசர்கள் இயந்திரம் தள்ளப்படுகிறது இந்த மிகப்பெரிய தேர் ஆடி அசைந்து வரும் காட்சியை பக்தி பரவசத்தோடு கண்டுக்களிப்பார்கள். ஆரூரா தியாகேசா என்று விண்ணதிர முழக்கங்கள் எழுப்பிய படி பக்தி பரவசத்தில் திழைத்து விடுவார்கள், திருவாரூர் விழா கோலம் பூண்டுள்ளது,


தேர் திருவிழாவை காண்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவ பக்தர்கள் வருகை தந்துள்ளார்கள்,


கடலா கடல் அலையா என்பது போல் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிகின்றன, எப்பொழுதும் பக்தர்கள் கோவிலுக்குள் தேங்காய் பூ பழம் பக்தி சூடம் இப்படி எடுத்து கோயிலுக்குள் செல்வார்கள் ஆனால் இன்று அந்த கடவுளுக்கெல்லாம் ராஜா மகாராஜா நகர்வலம் வருகிற பொழுது தனக்கு வேண்டிய அருளை அள்ளித் தருகிறார் என்பது இந்த பகுதி மக்களினுடைய நம்பிக்கை, இந்த தேரோட்டம் திருவாரூரில் முக்கியமான ஒரு நிகழ்வாகும், பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள், என்பது குறிப்பிடத்தக்கது,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *