தஞ்சாவூர் தூய அடைக்கல மாதா பேராலயம் நல்ல சாமானியர் இயக்கம் சார்பில் குருத்து ஞாயிறு முன்னிட்டு 6 ஆம் ஆண்டு மாபெரும் ரத்த தானம் மற்றும் இலவச மருத்துவ முகாம் காலை நடைபெற்றது

நல்ல சாமானியர் இயக்கம் நடத்தும் மாபெரும் ரத்த தானம் மற்றும் இலவச மருத்துவ முகாம் தூய அடைக்கல மாதா பேராலயத்தில் நடைபெற்றது

முகாமை தஞ்சை மாவட்ட ஆயர் சகாயராஜ் துவக்கி வைத்து ரத்த தானம் வழங்கினார். பங்குத்தந்தை ஜெயராஜ் தலைமை தாங்கினார்.முன்னாள் பங்கு தந்தை மிக்கேல் அடிகளார்,தூய மரியன்னை குருமடம் ஆன்மீக இயக்குனர் லூர்துசாமி, அருட்தந்தையர்கள், மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நல்ல சாமானியர் இயக்கம் ,தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார்.காலை முதல் மதியம் வரை நடைபெற உள்ள இந்தஇயக்குனர் முகாமில் ரத்த தானம், , ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.

ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு, பழ ஜூஸ் மற்றும் , பாராட்டுச சான்றிதழை வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நல்ல சாமானியர் இயக்கத்தின் உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *