கரூர் செய்தியாளர் மரியான் பாபு
குருத்தோலை ஞாயிறு
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.
கடந்த காலத்தில் இதே நாளில் ஜெருசேலம் நகரில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு கிறிஸ்து கழுதை மீது அமர்ந்து எழுச்சியோடு சென்ற அவருக்கு கைகளில் குருத்தோலையை வைத்துக்கொண்டு அரசராக அவரை வரவேற்ற நாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் குருத்தோலை நாளாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கரூரை அடுத்த பசுபதிபாளையம் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் டேவிட் தலைமையில்குருத்தோலை பவனி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் தென்னங்குருத் தோலையை ஏந்தியவாறு ஜெபம் செய்து பவணியில் பங்கேற்றனர்.
பின்னர் ஆலயத்தில் பங்கு தந்தை ஜோசப் டேவிட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்கள் மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரின் வாழ்விலும் ஆனந்தம் நிலைத்து நிற்க பங்குத்தந்தை அனைவருக்கும் ஆசி வழங்கினார்.