பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் அரசியல் கட்சியினர் ஏமாற்றிவிட்டனர் ஜெயித்து பதவியில் இருந்ததவர்கள் மக்களுக்கான அடிப்படை தேவையான மருத்துவ வசதி 24- மணிநேரமும் தடையில்லாமல் நகரம், கிராமம் என மக்களுக்காக கிடைப்பதை உறுதிசெய்யாமல் போனதால் மாவட்ட தலைமை மருத்துனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அலையும் பரிதாபத்திலேயே இன்றும் இருந்து வருகின்றனர்.
இருக்கும் மருத்துவமனைகளில் உள்ள நிலை தொடர்ந்து வருகின்றதை தன்னுடைய ஆட்சி காலங்களில் மாற்றிட எந்த முயற்சிகளையும் எடுக்காமல் மக்களை மருத்துவத்திற்கு அழைய வேண்டிய சூழ்நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர்.
மனிதர்கள் மட்டும் இன்றி அனைத்து உயிர்களும் வாழ்வததற்கான உணவுகளை உற்பத்தி செய்யும் நடமாடும் கடவுளாக உள்ள விவசாயிகள் உயர்ந்திட எந்த திட்டங்களையும், வளர்சியையும் ஏற்படுத்தாமல், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கூட விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில், விவசாய பொருட்கள் சந்தைபடுத்த தேவையான அடிப்படை வசதிகள், நீர் மேலாண்மை திட்டங்கள், தடுப்பணைகள் ஏற்படுத்தி கொடுப்பதை முற்றிலும் மறந்த அரசியல்வாதிகள் மத்திய, மாநில அரசுகளின் நல திட்டங்கள்,
இலவச பொருட்கள், மாநியதிட்டங்களுக்கு பெற்றுகொடுக்காத அரசியல்வாதிகள்.
நாளைய தலைமுறையினரின் வாழ்கையை மாற்ற கூடிய கல்வி அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கிடைப்பதை உறுதிபடுத்தாமல், அரசு பள்ளிகளில் மாணவர் இல்லை என்றநிலையில் பள்ளிகூடங்களை மூட காரணமாக இருந்து, மும்முனை கல்வியை முடக்கி, தனியார் பள்ளிகள் துவங்க தினந்தோறும் அனுமதி அளித்து ஊக்குவிப்பதில் முனைப்பாக செயல்படுவதிலேயே அரசு அதிக அக்கரை கொண்ட அரசாகவே செய்பட்டு வருகின்றது.
தொழில் சார்ந்த நிரந்தர வேலைவாய்ப்புகளை உறுவாக்காமல், இலவசங்கள் என்ற பெயரில் மக்களை மூளை சலவை செய்து அவர்கள் சிந்திப்பதற்க்கு வாய்பு அளிக்காமல், மேலும் இலவசங்களை தினித்து, வெற்று விளம்பரங்களை நாள்தோறும் வெளியிட்டு மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சியினரிடம் இருந்து மக்களை வளமான முன்னேற்ற பாதையில் இன்றைய தலைமுறையை வழிநடத்த எதிர்வரும் 2026 ஏப்ரல் 23 -இல் நடைபெறும் சட்டமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை முன்னெடுத்து சுயேச்சையாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதா தெரிவித்தார்.