கோவை குனியமுத்தூர் பகுதியில் இயற்கையான சூழலில், குளக்கரையோரம் பகுதியில்,முதன் முறையாக விழிப்புணர்வு மாரத்தான் கிசான் யூத் கிளப் சார்பாக வரும் ஏப்ரல் 26 ந்தேதி நடைபெற உள்ள இதில் ஆண்கள்,பெண்கள்,சிறியவர்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு சமூகத்தில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குளக்கரையோரத்தில் பிரம்மாண்டமான “ஹெல்த் அவேர்னஸ் மீட்” (Health Awareness Meet) மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

வரும் ஏப்ரல் 26 ந்தேதி நடைபெற உள்ள இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு குனியமுத்தூர் குளக்கரை பகுதியில் நடைபெற்றது..

இதில் கிசான் யூத் கிளப் அமைப்பினர் பேசுகையில்,கோவையின் முக்கிய பகுதியாக குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயணம்,உடற்பயிற்சி செய்பவர்களுக்கு குனியமுத்தூர் குளக்கரை நல்ல ஒரு பகுதியாக மாறி இருப்பதாக தெரிவித்தனர்..

போத்தனூர்,சுந்தராபுரம்,குனியமுத்தூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பகுதியாக உள்ள இந்த குளக்கரையோரத்தில் அனைத்து தரப்பினரும் ஒரு குடும்பமாக பழகி வருவதாக தெரிவித்தனர்..

இந்நிலையில் இதனை வலுப்படுத்தும் விதமாகவும்,உடல் ஆரோக்கியத்தில் நடைபயற்சி மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் 26 ந்தேதி கிசான் யூத் கிளப் மாரத்தான் நடைபெற இருப்பதாகவும்,10,5 மற்றும் 3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக குனியமுத்தூர் பகுதியில் முதன் முறையாக நடைபெற உள்ள இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்…

இயற்கையான சூழலில், குளக்கரையோரம் ஓடுவது பங்கேற்பாளர்களுக்குப் புத்துணர்ச்சியையும், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாரத்தான் குறித்து மேலும் விவரங்கள் அறியவும், முன்பதிவு செய்யவும், 9751 777 000
89033 19630 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்….

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *