நாகப்பட்டினம்,ஆக.18-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடியில் செல்வ மகாகாளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
பனங்குடி சிவன் கோவிலில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம், தீபாராதனை, சந்தனகாப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திறு நீர், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உதிர்வாய் துடைத்தல், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பனங்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.