கரூர்: கரூர் மாவட்டம், கோவை சாலையில் அமைந்துள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் 36 வயது பெண்ணுக்கு சிக்கலான முதுகுத்தண்டு மற்றும் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்தா மொண்டல் என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கை, கால்களில் படிப்படியாக பலவீனம் மற்றும் உணர்வின்மை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று மாதங்களாக நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், Craniovertebral Junction பகுதியில் பாதிப்பு, Cervical Myelopathy மற்றும் C1-C2 பகுதியில் Atlanto-Axial Dislocation உள்ளிட்ட சிக்கலான முதுகுத்தண்டு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக C1-C2 பகுதியில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், பின்னர் Posterior Stabilisation and Fusion எனப்படும் சிக்கலான அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளி தற்போது நலமுடன் இருப்பதுடன், கை, கால்களின் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிகிச்சையை முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குருசாமி நாச்சிமுத்து தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். அவர்களுடன் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து சிகிச்சையில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *