பேராவூரணி, மார்ச் 31-

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மிக சிறப்பாக நடந்தது கல்லூரி முதல்வர்(பொ) ராணி தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் செய்யதுஅகமதுகபீர் சிறப்புரையாற்றினார்.

கல்லூரி முன்னாள் முதல்வர் திருமலைச்சாமி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார் இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை தலைவர் உதவி பேராசிரியர் பழனிவேல் வரவேற்றார். வணிக நிர்வாகவியல் துணைத் தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *