துறையூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசல்யா காளை மாட்டுடன் வந்து வேட்பு மனு தாக்கல்

துறையூர் மார்ச்-31
திருச்சி மாவட்டம் துறையூரில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசல்யா சுரேஷ்குமார் காளை மாட்டுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதையொட்டி மார்ச் 30 ஏப்ரல் 2 ,4 ,6 ஆகிய நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று (மார்ச் 30) துறையூர் தொகுதி (தனி) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசல்யா சுரேஷ் குமார் துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானாவில் இருந்து காளை மாட்டுடன் மேளத்தாளத்துடன் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து தேர்தல் பார்வையாளர் பிஜய் குமார்தாஸ், துணை தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமாகிய சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் துறையூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌவுசல்யா சுரேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாதக வேட்பாளர் கௌவுசல்யா சுரேஷ்குமார் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி, காளிப்பட்டி, ஜீவா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற கணவரும் இன்பா, புகழ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இதில் நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்ராஜ், வீரதமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரெங்கசாமி,மண்டல செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். துறையூர் சட்டமன்ற தொகுதியில் முதல் நாளில் முதல் நபராக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசல்யா வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.துறையூர் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *