கரூர் செய்தியாளர் மரியான் பாபு


தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முன்னாள் அமைச்சர்


கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சரும்,திமுக கரூர் மாவட்ட செயலாளரும்,மேற்கு மண்டல பொருப்பாளருமான வி.செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது


கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் கரூர் மாவட்டதிற்க்கு மட்டும் முதல்வர் 5000 கோடி நிதி வழங்கி கரூர் மேன்மையடைய வளாச்சி திட்டங்கள் செய்துள்ளோம்.திமுக ஆட்சியில் நாங்கள் செய்த சாதனை திட்டங்ளை சொல்லி பொது மக்களிடம் நாங்கள் வாக்குகள் சேகரிக்கிறோம். ஆனால் அதிமுகவினர் எதை சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்பார்கள்?


கரூரில் நிற்காமல் கோவை ஓடிவிட்டார் என்று பிரச்சாரம்தான் செய்து வருகிறார்கள்
எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதை செய்வதுதான் ஒரு தொண்டணின் கடமை அதைதான் நான் செய்துள்ளேன். என்னை பொறுத்தவரை கரூரும், கோவையும் ஒன்றுதான் கரூரில் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் திமுக தேர்தல் அறிக்கை தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆக உள்ளது என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *