திருவாரூர் செய்தியாளர் வேலா, செந்தில்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க, ஸ்டாலின் இன்று (மார்ச் 31) திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்,
திருவாரூர் தெற்கு வீதியில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு, திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கே,கலைவாணன், மன்னார்குடி அமைச்சர் டிஆர்பி, ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் க, மாரிமுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ள நன்னிலம் எஸ் டி பி ஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து பேசினார்,
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், 2021 சட்ட பேரவை தேர்தலில், அதை தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலிலும் தனது பிரச்சார பயணத்தை ஸ்டாலின் திருவாரூரிலிருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து நாளை (ஏப்ரல் 1) காலை திருச்சி உலவர் சந்தை மைதானத்திலும், மாலை 5 மணி அளவில் கரூர் ராயனூரில் நடைபெறும் பொது கூட்டத்திலும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்,