​கோவை:
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்த மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் (தமிழக மேற்கு மண்டலம்) சார்பில் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.


​இந்த நிகழ்விற்கு மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செ.வெள்ளிமலை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு?” என்ற தலைப்பில் விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் காமராஜர் பாசறை C.பழனிவேல், அகில இந்திய அனைத்து தொழிலாளர் கழகம் P.C.கண்ணன், சோசலிஸ்ட் கட்சி N.K.சுந்தர், களப் போராளி அதிரடி ஆனந்தன், அம்பேத்கர் அனைத்து தொழிலாளர் பட்டியல் சங்கம் R.முருகானந்தன், அம்பேத்கர் மக்கள் விடுதலைக்கழகம் C.M.V.ரங்கநாதன், தமிழக தலித் முன்னேற்ற கழகம் S.B.நாகராஜ், SNTUC தலைவர் ஆறுச்சாமி, தமிழக இளஞ்சிறுத்தைகள் கட்சி இளம்புயல் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

​மேலும், தொண்டாமுத்தூர் ஆஷிபா, மதுக்கரை அருணா, கவுண்டம்பாளையம் தீபா, தொழிலாளர் விடுதலைக் கட்சி பாஸ்கர், இயற்கை ஆர்வலர் துரைகண்ணன், A.உதயகுமார், M.தனபால், பேரூர் A.மகேந்திரன், சிங்காநல்லூர் M.அருணாசலம், திருப்பூர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பல்வேறு பகுதி சார்ந்த மக்கள் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.


​மனைத்தொழில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதையும், தொழிலாளர் வர்க்கத்தின் வாக்குகளை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செலுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவாக, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தின் முடிவுகள் வரும் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *