கோவை சாய்பாபா காலனி பகுதியில் பல் சமய நல்லுறவு இயக்க உயர் மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் அதன் தலைவர் முகம்மது ரபி தலைமையில் நடைபெற்றது..
இதில் தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது ரஃபி,
அனைத்து மக்களின் மீது அன்பு கருணை காட்டி சமத்துவம் சகோதரத்துவம் பேணி மத நல்லிணக்கத்தோடு நாட்டு மக்கள் வாழ முதல்வர் ஸ்டாலின் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார் ..
இந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி தமிழகத்தை அமைதி பூங்காவாக செழிக்க செய்திருக்கின்றார்…
இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக வரலாற்றில் 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களுக்கு உண்டான உதவிகளை செய்தும் அனைத்து மக்கள் அன்பை பெற்று இருக்கிறார்
நடிகர் விஜய் த.வெ.க.தமிழகத்தில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர்,நடிகர் மோகம் தற்பொழுது அதிகரித்துள்ளதாக கூறிய அவர், ரஜினி வந்தாலும் நயன்தாரா வந்தாலும் கூட்டம் அதிகரித்து காணப்படும் இந்தக் கூட்டம் வாக்காக மாறும் எனக் கூற முடியாது..
கரூரில் 41 பேர் இறந்த சம்பவம் சிபிஐ விசாரணை முடிந்து வெளியே வந்து சுதந்திர வாங்கி தந்ததைப் போல காரில் கையை காட்டி விஜய் சந்தோஷமாக வலம் வருவதை சுட்டி காட்டி பேசினார்..
இது பிஜேபி அதிமுகவின் திட்டம் என கூறியவர் இளைஞர்களை விஜய் நல்வழிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்..
கோவையில் முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுவது தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களுக்கு பலம் அதிகரித்துள்ளதாக கூறிய அவர்,கோவையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்..
இந்த சந்திப்பின் போது,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் எம்.எம்.ராமசாமி, அபுதாஹிர் இஸ்மாயில் இப்ராஹிம் டிஸ்கோ காஜா அசாருதீன் கோவை தல்ஹா ராதாகிருஷ்ணன் பாரூக் ஆசிப் முகமது அலி, பைசல் ஹாரிஸ் பர்கான் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்…