கோவை கிளஸ்டர் திரைப்பட தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா
ஆறு முறை தேசிய விருது பெற்றபிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் பட தொகுப்பாளர் லெனின் பங்கேற்பு
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திரைப்பட துறை சார்ந்த தொழில் நுட்ப கல்லூரியாக கோவை அவினாசி சாலையில் கிளஸ்டர்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் மீடியா அண்ட் டெக்னாலஜி செயல்பட்டு வருகிறது திரைப்பட துறை சார்ந்த நடிப்பு, இயக்கம்,ஒளி மற்றும் ஒலி பதிவு,எடிட்டிங்,கிராபிக்ஸ் என பல்வேறு தொழில் நுட்பங்களுக்கு பயிற்சி அளித்து இக்கல்லூரியில் கடந்த 2021-2024 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கிளஸ்டர்ஸ் வளாக அரங்கில் நடைபெற்றது…
கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அரவிந்தன் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் படத் தொகுப்பாளருமான 6 முறை தேசிய விருது பெற்ற எடிட்டர் B. லெனின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்..
அப்போது பேசிய அவர்,தொழில் நுட்பங்கள் தொடர்ந்து மாறி வரும் திரைப்பட துறையில் பணியாற்ற விரும்பும் இளம் தலைமுறையினர் நவீன நுட்பங்களை கற்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார் விழாவில் பல்கலைக்கழக தரவரிசையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
கல்லூரி முதல்வர் பிரேம் ஆனந்த் உட்பட பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்…