பெரியகுளத்தில் வாசிப்பை நேசிப்போம் மாணாக்கர்களின் தனித் திறன் ஊக்குவிப்பு தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதங்கங்கள் வழங்கி கௌரவிப்பு
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் ஜெ அகாடமி, வேவ்ஸ் பவுன்டேசன் மற்றும் பெரியகுளம் கோல்டு அரிமா சங்கத்தின் சார்பில் மாணாக்கர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பை நேசிப்போம் எனும் தலைப்பில் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 1ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான மாணாக்கர்கள் கலந்து கொண்டனர் மாணவர்களிடையே வாசிப்பு திறன், மற்றும் எழுத்துத் திறன் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு மற்றும் எழுத்துத் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டன .
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஜெ அகடமி நிறுவனர் சித்ரா ஜெகன் , வேவ்ஸ் அறக்கட்டளை செயலர் ஜோதி, பெரியகுளம் அரிமா கோல்டு தலைவர் பாண்டியன் பக்கிரி முகமது , செயலர் பொறியாளர் ஜெகன், இயக்குநர் ஆசிரியர் டேவிட், மூத்த அரிமாக்கள் பழனிராஜகோபால், முத்து இருளப்பன், மாவட்ட தலைவர் பொறியாளர் ராமநாதன், பொறியாளர் நித்யானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.