தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் அஇஅதிமுக வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் திருமதி சத்தியபாமா, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஃபிலிக்ஸ் ராஜாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் முன், அண்ணாநகர் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் வேட்பு மனுவை வைத்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அமராவதி ரவுண்டானாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பெண்கள் உற்சாகமாக நடனமாடி, ட்ரம் செட் மற்றும் மேள தாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த ஊர்வலம் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது. அங்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சத்தியபாமா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அஇஅதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி. மகேந்திரன், தொகுதிப் பொறுப்பாளர் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் முத்து வெங்கடேஷ்ரன்பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ருத்ரகுமார் பாமக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.