கல்பாக்கம், ஏப் 6
தமிழக சட்ட மன்ற தேர்தலில் செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் இராஜசேகர் பவுஞ்சூர் அடுத்த செம்பூர் பகுதியில் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் தலைமையில் வாக்கு சேகரித்தார் அவருக்கு ஒன்றிய செயலாளர் கே வேலு மற்றும் நிர்வாகிகள் ஆளுயர மாலை யணித்து வரவேற்றனர். அப்போது மாற்றுக் கட்சியைச் சேர்ந்த செம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி-ஏழுமலை , சோபன்பாபு மற்றும் பலர் அதிமுகவில் இணைந்தனர்.