ஈரோடு காங்கிரஸ் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோபிநாத் பழனியப்பன் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பிட் ஜெயின் தங்களது கிழக்கு சட்டமன்றத் தொகுதி க்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவருடன் ஈரோடு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாநகராட்சி உறுப்பினர் விஜய பாஸ்கர்,தி. மு. க. தெற்கு மாவட்ட துணை செயலாளர் அ. செந்தில் குமார் வி. சி. க. ஈரோடு மாவட்ட செயலாளர் சாதிக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆரிஃப், எஸ்.டி. பி. ஐ.கட்சி லூக்காமான்
ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் கிழக்கு தொகுதி வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் பத்திரிக்கையாளருக்கு கொடுத்த பேட்டியில் ஈரோடு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுக திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
எனவும் கூறினார் மேலும் அவர் கூறுகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் மற்றும் இதர பெண்கள் உதவித் தொகை திட்டம் சிறப்பாக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது எனவும் தமிழக முழுவதும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி செய்வார் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் தாங்கள் வெளியூரில் இருந்து ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்க பெற்று இருக்கின்றீர்கள் இதனால் உள்ளூர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர்
இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நிருபர் கள் கேட்கையில் அவர் நான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராக இங்கு நான் போட்டியிட நியமிக்கப்பட்டுள்ளேன்
மேலும் நான் வெளி மாவட்ட ஆள் இல்லை நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜனனி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலேயே பயின்றேன் மேலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஈரோடு காமராஜர் பள்ளியிலேயே பயின்றேன் தற்போது தொழில் நிமித்தம் காரணமாக வேற மாவட்டத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன்
தவிர நான் வெளி மாவட்டத்தை சேர்ந்தவன் அல்ல நான் ஈரோட்டை சேர்ந்தவன் என்பதை நான் உங்களுக்கு நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். எனவே ஈரோடு காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் எங்களுடன் இத்தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெற பாடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.