கோயம்புத்தூர்
அவாட எலக்ட்ரோ, அவாட குழுமத்தின் சூரிய பிவி உற்பத்திப் பிரிவு, தமிழ்நாட்டில் முன்னனி இபிசி நிறுவனங்கள், கூரைமேல் பொருத்துபாவர்கள் மற்றும் பிராந்திய சேனல் பார்ட்னர்களை (Channel Partners) ஒருங்கிணைத்ததன் மூலம், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பரவலாக்கப்பட்ட சூரிய சக்தி (Distributed Solar) துறையில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்கான ஒரு தீர்க்கமான முயற்சியை இது குறிக்கிறது.
குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் கூரைப் பிரிவுகளில் சூரிய ஆற்றல் பயன்பாடு அதிகரித்து வருவதால், அவாட எலக்ட்ரோ நிறுவனம், பொறுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர் சூழலுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சேனல் கூட்டாண்மைகளை (Channel Partnerships) வலுப்படுத்துவது, தயாரிப்புகளின் கிடைப்புத்தன்மையை (Product Accessibility) மேம்படுத்துவது மற்றும் சில்லறை விற்பனை சார்ந்த சந்தைகளுக்குத் தடையற்ற விநியோகத்தை (Consistent Supply) உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தது.”
இந்த கூட்டத்தில், நிறுவனம் அதன் மேம்பட்ட 720 Wp N-வகை TOPCon சூரிய மாட்யூலை சிறப்பித்துக் காட்டியது. உயர்-வாட் உள்ளமைவு மேம்பட்ட மின் திறன் மற்றும் செலவு போட்டித்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
தற்போது 8.50 ஜிகாவாட் சோலார் பிவி மாட்யூல் உற்பத்தித் திறன் கொண்ட அவாட எலக்ட்ரோ, நாக்பூர் மற்றும் தாத்ரி (உபி) ஆகிய இடங்களில் உள்ள தனது உற்பத்தி வசதிகளில் தயாரிப்புகளை உருவாக்குகிறது.
தானியங்கு உற்பத்தி திறன்களைக் கொண்ட நாக்பூர் வசதி, சுமார் 16 விநாடிகள் என்ற சராசரி சுழற்சி நேரத்தை அடைகிறது. இது, துல்லிய உற்பத்தி, செயல்பாட்டுத் திறன் மற்றும் வளர்ந்து வரும் சில்லறை வர்த்தக தேவையைப் பூர்த்தி செய்ய அளவிடத்தக்க விநியோகத்திற்கான நிறுவனத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
அவாட எலக்ட்ரோவின் மாட்யூல்கள் ALMM-பட்டியலிடப்பட்டவை மற்றும் BIS, IEC, UL உள்ளிட்ட சர்வதேச தரச் சான்றிதழ்களைப் பெற்றவை. இது, பயன்பாட்டு அளவிலான சூரிய பூங்காக்கள் முதல் கூரைமேல் பொருத்தல்கள் வரை பல்வேறு பகுதிகளில் நிறுவனத்தின் தர நம்பகத்தன்மையையும் நிதி ஏற்புத் தகுதியையும் உறுதிப்படுத்துகிறது.
இந்நிகழ்வில் பேசுகையில், திரு. வினீத் மிட்டல், தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர், அவாட எலக்ட்ரோ லிட், “இந்தியாவில் சூரிய ஆற்றல் வளர்ச்சியின் வேகம், கூரை மற்றும் பகிர்ந்தளிப்பு பிரிவுகளால் அதிகளவில் முன்னெடுக்கப்படுகிறது. உயர் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மாட்யூல்களை பொறுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எளிதாக அணுகும் வகையில், வலுவான பிராந்திய சேனல் கூட்டு அணுகுமுறைகளை உருவாக்குவதே எங்கள் முதன்மையான கவனமாகும். மேம்பட்ட N-வகை TOPCon தொழில்நுட்பத்துடனும், அளவிடத்தக்க உற்பத்தித் திறனுடனும், சில்லறை வர்த்தக சூரிய சூழல் அமைப்புக்கு நம்பகமான நீண்டகால கூட்டமைப்பில் இருப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.”
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாட்யூல் ஒருங்கிணைப்பு, பொருத்துதல் திறன், உத்தரவாத உறுதி மற்றும் விநியோக நம்பகத்தன்மை கட்டமைப்புகள் குறித்த தொழில்நுட்ப விவாதங்கள் நடத்தப்பட்டன. விநியோகஸ்தர் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், கட்டமைக்கப்பட்ட சேனல் துணையுடனும் பல்வேறு மாநிலங்களில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறை திட்டத்தையும் நிறுவனம் விளக்கியது.
இந்தியா அதிக எரிசக்தி சுதந்திரத்தையும் உள்நாட்டு உற்பத்தி வலுவையும் நோக்கி முன்னேறும் இந்த வேளையில், அவாட எலக்ட்ரோ அளவிடுதல், தொழில்நுட்பம் மற்றும் சில்லறை அணுகல்தன்மை ஆகியவற்றை இணைத்து, நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் கூரை சூரிய சந்தையில் பங்கேற்க இலக்கு வைத்துள்ளது.