கும்பகோணம்தொகுதி தி.மு.க. வேட்பாளர் சாக்கோட்டை க..அன்பழகன் ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் காந்தி பார்க் அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது
தஞ்சை மாவட்டம் எப்பவுமே தி.மு.க. கோட்டை, இந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தான் நமது தலைவர் கருணாநிதியை கொடுத்த மாவட்டம். 1962-ல் கருணாநிதி இந்த தஞ்சை மண்ணில் இருந்து தான் முதன்முதலாக வெற்றிபெற்றார். நிச்சயமாக இந்த முறை 8 தொகுதியிலும் வெற்றி பெற போவது உறுதி. கும்பகோணம் தொகுதி வேட்பாளர் க..அன்பழகன் , அவரைப் பற்றி நான் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்க அத்தனை பேருக்கும் அறிமுகமானவர்
க..அன்பழகன் . கழகப் பணி, மக்கள் பணி எதுவாக இருந்தாலும் அது இரண்டிலும் சிறப்பாக செயல்படுபவர். அவருடைய நிர்வாகத் திறமையால, கும்பகோணம் சட்டமன்ற வளர்ச்சிக்கும் நிறைய பணியாற்றி இருக்கிறார். கும்பகோணம் மாநகராட்சியாக தரத்தை பெற்றுக் கொடுத்தார்
அவரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வைக்கணும். குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வைக்க வேண்டும். என்றார்